மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நவ.10-ல் ஒடிசா செல்கிறார் குடியரசுத் தலைவர் முர்மு! 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக நவம்பர் 10-ம் தேதி ஒடிசா செல்லவிருப்பதாக, ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. 

News image
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு
Updated On :2 நவம்பர் 2022, 10:39 am

DIN

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக நவம்பர் 10-ம் தேதி ஒடிசா செல்லவிருப்பதாக, ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த ஜூலையில் இந்தியக் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு, அவர் தனது சொந்த மாநிலத்திற்கு செல்வது இதுவே முதல்முறையாகும். 

நவம்பர் 10ஆம் தேதி பிற்பகல் புவனேஸ்வர் சென்றடையும் குடியரசுத் தலைவர், ஆளுநர் மாளிகையில் தங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அடுத்த நாள், புது தில்லி திரும்புவதற்கு முன்னதாக புரியில் உள்ள ஸ்ரீ ஜெகநாதர் கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஒடிசா ஆளுநர் மாளிகை அலுவலகத்திற்கு, குடியரசுத் தலைமை செயலகம் தகவல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.