டெங்கு நோயாளிகளுக்கான பிளேட்லெட், படுக்கைகளுக்கு பஞ்சமில்லை: துணை முதல்வர்

உத்தரப் பிரதேசத்தில் டெங்கு பாதித்தோர் எண்ணிக்கை 7,000 ஆக அதிகரித்து நிலையில், பிளேட்லெட்டுகள் மற்றும் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக அம்மாநில துணை முதல்வர் பிரதேஷ் பதக் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 

அரசியல் ஆதாயங்களுக்காக, சமாஜ்வாதி கட்சி சமூக ஊடகங்கள் மூலம் சுகாதாரம் தொடர்பான பிரச்னைகளில் மாநில அரசைக் குறிவைத்து மக்கள் மத்தியில் பீதியை உருவாக்குகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். 

கடந்தாண்டு அக்டோபரில் 17 முதல் 18 ஆயிரம் டெங்கு பாதிப்பு இருந்த நிலையில், தற்போது மாநிலத்தில் நேற்றிரவு வரை 7000 டெங்கு நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தேவைப்பட்டால் நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான பிளேட்லெட்டுகள் மற்றும் படுக்கைகளுக்கு மாநிலத்தில் பஞ்சமில்லை என்றும் அவர் கூறினார். 

டெங்குவை விட ஆபத்தான புதிய காய்ச்சலைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் பரவி வருகின்றன. நான் இது குறித்து நிபுணர்களிடம் பேசினேன், இது தவறானது.

வானிலை மாற்றத்தால் மக்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அருகில் உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com