ஹிமாசல் தேர்தல்: கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த காங்கிரஸ்

ஹிமாசலில் முதியோருக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை திரும்ப கொண்டு வருவது உட்பட பல்வேறு கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குகுறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது. 
ஹிமாசல் தேர்தல்: கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த காங்கிரஸ்

ஹிமாசலில் முதியோருக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை திரும்ப கொண்டு வருவது உட்பட பல்வேறு கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குகுறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

68 தொகுதிகளைக் கொண்ட ஹிமாசல் சட்டப்பேரவைத் தேர்தல் இம்மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன. முதியோருக்கான பழைய ஓய்வுதியத் திட்டத்தினை திரும்பக் கொண்டு வருவது, 300 யூனிட் இலவச மின்சாரம், புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்காக ரூ.680 கோடி மற்றும் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகை வழங்குவது போன்ற பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ஹிமாசல் தேர்தலில் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது மாநில சட்டமன்ற உறுப்பினர்களிடத்திலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடமும் ஆலோசித்த பிறகே அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள் குழுத் தலைவர் தானி ராம் ஷந்தில் கூறியதாவது: ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக பாஜக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், அதனை செயல்படுத்தாமல் மக்களின் எதிர்பாப்புகளை  பொய்யாக்கியது. காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் வெறும் வளர்ச்சிக்கான வாக்குறுதிகள் மட்டுமல்ல. இந்த வாக்குறுதிகள் ஹிமாசல் மக்கள் அனைவரின் நலன் கருதி அறிவிக்கப்பட்டவை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com