ஷ்யாம் சரண் நெகி
ஷ்யாம் சரண் நெகி

34 தேர்தல்களில் வாக்களித்த சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் மறைவு

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஹிமாச்சல்பிரதேசத்தைச் சேர்ந்த 106 வயதான ஷ்யாம் சரண் நெகி வயது மூப்பின் காரணமாக காலமானார். 
Published on

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஹிமாச்சல்பிரதேசத்தைச் சேர்ந்த 106 வயதான ஷ்யாம் சரண் நெகி வயது மூப்பின் காரணமாக காலமானார். 

ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த ஷ்யாம் சரண் நெகி சுதந்திர இந்தியாவின் முதல் வாக்களாராக அறியப்படுகிறது. 1951ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் கல்பா தொகுதியில் வாக்களித்த இவர் இதுவரை 34 தேர்தல்களில் தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார். 

நவம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் நெகி தபால் மூலம் வாக்களித்ததே அவரது கடைசி தேர்தல் வாக்குப்பதிவாக மாறியுள்ளது. 

நெகியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், தங்களது கடமைகளை நிறைவேற்றவும் இன்றைய இளையர்களுக்கு நெகி ஊக்கமாக இருந்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

நெகியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள மாநில அரசு அவருக்கு அரசு மரியாதையை அறிவித்துள்ளது. 

1917ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஹிமாச்சல் பிரதேசத்தில் பிறந்த நெகி இதுவரை 16 நாடாளுமன்றத் தேர்தல்களில் தங்களது வாக்கினைப் பதிவு செய்துள்ளார். 

இன்றைய காலத்தில் ஜனநாயகத்தில் பங்கெடுத்து வாக்களிக்காமல் தவிர்க்கும் பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாழ்ந்த நெகியின் மறைவிற்கு பலரும் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com