ரிசர்வ் வங்கியே அச்சடிப்பதில்லையே? 8 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள்

மகாராஷ்டிர மாநிலத்தில், ரூ.8 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை தாணே குற்றவியல் துறை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தாணே மாவட்டம் வாக்லே தொழிற்பேட்டையின் ஐந்தாவது பிரிவில், கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் கும்பலை, காவல்துறையினர் கண்டுபிடித்து சனிக்கிழமை காலை சோதனை நடத்தினர்.

இதில், 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பல்கார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அறிமுகம் செய்யப்பட்ட புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை 2019ஆம் ஆண்டிலேயே ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது.

அறிமுகப்படுத்தப்பட்ட 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு, அச்சடிக்கும் எண்ணிக்கையை மெல்ல குறைத்து வந்த ஆர்பிஐ, 2019ஆம் ஆண்டு முற்றிலுமாக நிறுத்திவிட்டது.

2000 ரூபாய் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்த நிலையில், அதனை அச்சடிப்பை ரிசர்வ் வங்கி நிறுத்தியதாகக் கூறப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல், ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து மெல்ல குறைத்தும் வருகிறது. அதாவது, 2020ஆம் ஆண்டில் 274 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. தற்போது இது 214 கோடியாகக் குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com