ரூ.10,000-க்கு பெண்கள் விற்பனை! காலணியுடன் ஒப்பிட்ட காங்கிரஸ் அமைச்சர்!

ராஜஸ்தானில் பெண்கள் ஏலம் விடப்பட்ட விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் அசோக் சந்த்னா அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
ரூ.10,000-க்கு பெண்கள் விற்பனை! காலணியுடன் ஒப்பிட்ட காங்கிரஸ் அமைச்சர்!


ராஜஸ்தானில் பெண்கள் ஏலம் விடப்பட்ட விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் அசோக் சந்த்னா அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பில்வாரா மாவட்டத்தில் ரூ.10 ஆயிரத்துக்கு பெண்கள் ஏலம் விடப்படுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த பணத்திற்கு இந்தக் காலத்தில் ஷூ கிடைப்பதே அரிது. எந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என பொறுப்பற்ற வகையில் பதிலளித்துள்ளார். 

ராஜஸ்தான் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான அசோக் சந்த்னாவின் விடியோவை பாஜக எம்.எல்.ஏ. வாசுதேவ் தேவ்நானி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோவை பகிர்ந்து பலர் விமர்சித்து வருகின்றனர். 

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் ரூ.10 ஆயிரத்துக்கு பெண்கள் ஏலம் விடப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜஸ்தான் அமைச்சர் அசோக் சந்த்னாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அப்போது பதிலளித்த அமைச்சர், எந்த உலகத்தில் நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். இந்த காலகட்டத்தில் ஷூ கூட ரூ.10,000-க்கு கிடைப்பதில்லை. முட்டாள்தனமான பேசாதீர்கள் என பதிலளித்துள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த விடியோவைப் பகிர்ந்த பாஜக  எம்.எல்.ஏ. வாசுதேவ் தேவ்நானி தெரிவித்துள்ளதாவது, மாநிலத்தில் குற்றச்செயல்கள் தலைவிரித்தாடுகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நடைபெற்று வருகின்றன. பெண்கள் ஏலம் விடப்படுகின்றனர். ஆனால், அந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல், பொறுப்பற்ற வகையில் மாநில அரசு நிர்வாகிகள் பதிலளிக்கின்றனர் என விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தானில் ஏலம் விடப்படும் பெண்கள், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மும்பை, தில்லி, என பல மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றனர். சிலர் வெளிநாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றனர். 

பில்வாரா மாவட்டத்தில் கடனுக்காக பெண்கள் ஏலம் விடப்படுவது தொடர்பான சம்பவம் குறித்து உண்மை கண்டறிய தேசிய மகளிர் ஆணையம் கடந்த அக்டோபர் மாதம் இரண்டு பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com