
வங்கதேச உள்துறை அமைச்சருடன் அமித் ஷா சந்திப்பு
வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மன் கானை, உள் துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்துப் பேசினார்.
இதில், இரு நாட்டு எல்லை நிர்வாகம், பொதுப்பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
படிக்க | சுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பு! ராஜ்நாத் சிங்
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் பணம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கூட்டப்பட்ட மாநாட்டில் வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மன் கான் கலந்துகொண்டார்.
அப்போது மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, அசாதுஸ்மனை நேரில் சந்தித்துப் பேசினார். இதில் பரஸ்பரம் இரு நாட்டு எல்லைககளை நிர்வகிப்பது, எல்லைப் பாதுகாப்பில் உள்ள பொதுப் பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
படிக்க | 3 நாள்கள் மருத்துவமனையில் இருந்த ஷ்ரத்தா! துன்புறுத்திய அஃப்தாப்! - நண்பர்கள் வாக்குமூலம்