புணே-பெங்களூரு நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய 48 வாகனங்கள்

புணே-பெங்களூரு நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய 48 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
புணே-பெங்களூரு நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய 48 வாகனங்கள்

புணே-பெங்களூரு நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய 48 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம், புணே- பெங்களூரு இடையே உள்ள நெடுஞ்சாலையில் நவலே பாலம் பகுதியில் நேற்றிரவு 9 மணியளவில் டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தபோது அதன் பிரேக் திடீரென செயலிழந்துள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய அந்த லாரி அருகே இருந்த மற்ற வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தினால் டேங்கர் லாரியில் இருந்து எண்ணெய் கசிந்துள்ளது. 

இதனால் சாலைகள் வழுக்கும் தன்மையுடையதாக மாறியதால், மற்ற வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.

நிகழ்விடத்தில் தீயணைப்புப் படையினர், காவல்துறை பணியாளர்கள் மற்றும் அப்பகுதிமக்களும் மீட்புப் நடவடிக்கை ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 30க்கும மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

புணே-பெங்களூரு நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய 48 வாகனங்களால் அப்பகுதியில் சுமார் 2 கிமீ தூரத்துக்கும் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com