தில்லி சந்தையில் பெரும் தீ விபத்து: உடல் கருகி இளைஞர் பலி!
கிழக்கு தில்லியின் காந்தி சந்தையில் உள்ள கடையின் 2வது தளத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 19 வயது இளைஞர் உடல் கருகிய நிலையில் போலீசார் மீட்டுள்ளனர்.


கிழக்கு தில்லியின் காந்தி சந்தையில் உள்ள கடையின் 2வது தளத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 19 வயது இளைஞர் உடல் கருகிய நிலையில் போலீசார் மீட்டுள்ளனர்.
காந்தி சாலையில் உள்ள ஜெய் அம்பே ஆடைக் கடையில் புதன்கிழமை மாலை 5.40 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் எரிந்த நிலையில் இளைஞரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை துணை ஆணையர் தெரிவித்தார்.
இறந்தவர் ஷெஹ்னாவாஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இருப்பினும், உடல் முழுவதுமாக கருகிவிட்டதால், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைக் கண்டறிய டிஎன்ஏ சோதனை நடத்தப்படுகிறது.
புதன்கிழமை மாலை 5.40 மணியளவில் ஏற்பட்ட தீயை சுமார் 35 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 150 தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தினர். அதிகாலை 3.30 மணியளவில் தீ அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். குறைந்த மின்னழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அப்பகுதியிந்நல போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...