காங்கிரஸில் என்னை யாரும் இயக்க முடியாது: மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் என்னை யாரும் இயக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸில் என்னை யாரும் இயக்க முடியாது: மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் என்னை யாரும் இயக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ள காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் அவர், தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக மாநிலங்கள்தோறும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் பயணம் மேற்கொண்ட அவர், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் தன்னை யாரும் இயக்க முடியாது என தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: “ காங்கிரஸ் கட்சியில் ரிமோட் கண்ட்ரோல் என்று ஒன்று இல்லை. பாஜக போல் அல்லாமல் காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் நடத்தப்பட்டே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எங்களது குழுக்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள் மூலம் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். நான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சோனியா காந்தியே என்னை இயக்குவார் எனப் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், காங்கிரஸில் யாரும் யாரையும் இயக்கவில்லை. காங்கிரஸ் எப்போதும் ஒன்றிணைந்தே ஒரு முடிவினை எடுக்கும். யாராவது என்னை இயக்குவார்கள் என நினைத்தால் அது விமர்சிப்பவர்களின் நினைவாக மட்டுமே இருக்கும்.

பாஜகவில் கட்சியின் தலைவரைத் தேர்தல் வைத்து தேர்ந்தெடுக்கும் கலாசாரமே கிடையாது. பிரதமர் எத்தனை முறை கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளார். உண்மையில், பாஜக தலைவர்கள் தேர்தலின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதிலிருந்து எந்தக் கட்சியில் பிண்ணனியில் இருந்து இயக்கப்படுகிறார்கள் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com