ஆஸி. திடலில் அமைச்சர் ஜெய்சங்கர்! சச்சின் நினைவுகளைப் பகிர்ந்த ஸ்டீவ் வாக்

ஆஸ்திரேலியாவின் சிட்னி திடலுக்குச் சென்ற வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக்கை நேரில் சந்தித்தார்.

சிட்னி கிரிக்கெட் திடலில் அமைச்சருடன் கிரிக்கெட் விளையாடிய ஸ்டீவ் வாக், சச்சின் டெண்டுல்கர் உடனான நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். 

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பல்வேறு பிணைப்புகளை உள்ளடக்கிய விளையாட்டு கிரிக்கெட். இந்தியாவையும், ஆஸ்திரேலியாவையும் கிரிக்கெட் இணைக்கிறது. 

சிட்னி கிரிக்கெட் திடலைப் பார்வையிடும் நேரம் வாய்த்தது. கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்டீவ் வாக்கையும் சந்தித்தேன். கிரிக்கெட் மற்றும் மற்ற விஷயங்களில் இந்தியாவின் மீது இருந்த நம்பிக்கை பாராட்டினார். குறிப்பாக சச்சின் உடனான நினைவுகளைப் பகிர்ந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com