குஜராத் தேர்தல் அறிவிப்பு வெளியாகவில்லை

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.
குஜராத் தேர்தல் அறிவிப்பு வெளியாகவில்லை

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. குஜராத் சட்டப்பேரவைத்  தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி 18, 2023 அன்று முடிவடைகிறது. கடந்த 2017 ஆம் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 182 இடங்களில்  முடிவுகள் அறிவிக்கப்பட்டதில், பாஜக 99 இடங்களையும், காங்கிரஸ் 77 இடங்களையும், 1 இடத்தில் என்சிபியும், பாரதிய பழங்குடியினர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் முறையே 2 மற்றும் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றது. பாஜக தனிப்பெரும்பான்மையை தக்கவைத்து 6-வது முறையாக ஆட்சி அமைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com