
இந்தியாவிலேயே முதல் முறையாக விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் எந்த மாதிரியான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வரையறுக்க சோதனை மைய வசதி அகமதாபாத்தில் உருவாக்கப்பட உள்ளது.
இந்த புதிய சோதனை மையத்தின் மூலம் விளையாட்டுப் போட்டிகளில் ஊக்கமருந்து பயன்படுத்துபவர்கள் மற்றும் தனக்கே தெரியாமல் ஊக்கமருந்து மூலப்பொருள்கள் அடங்கிய உணவினை உட்கொள்பவர்கள் என அனைவரையும் கட்டுப்படுத்த இயலும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: டிஆர்எஸ்-ல் இருந்து விலகினார் பூர நர்சய்யா கௌட்
இந்த புதிய சோதனை மைய வசதியை விளையாட்டுத் துறை அமைச்சகம், உணவுப் பாதுகாப்பு மற்று தர கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் என்எஃப்எஸ்யூ அமைப்பு இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் உருவாக்க உள்ளது. உலக ஊக்க மருந்து தடுப்பு குறித்த நிகழ்வில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அறிவிக்கப்பட்டது.
உணவுப் பொருள்களில் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து பொருள்கள் உள்ளதாக என பரிசோதிக்க எந்த ஒரு சோதனை மைய வசதியும் இந்தியாவில் இல்லை. இந்நிலையில், தற்போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த புதிய சோதனை மைய வசதியின் மூலம் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை கண்டறிந்து அதனை விளையாட்டு வீரர்கள் உட்கொள்வதைத் தவிர்க்க முடியும். இதன்மூலம் விளையாட்டு வீரர்கள் எந்த மாதிரியான உணவினை உட்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வினையும் ஏற்படுத்த முடியும்.
இதையும் படிக்க: காஷ்மீர் பண்டிட் கொலை: ஜம்மு சாலையில் போராட்டம்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வட்டு எறிதலில் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் கமல்பிரீத் கௌர் ஊக்கமருந்து பயன்படுத்தியதால் அவருக்கு 3 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.