
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நான்கு நாள் பயணமாக அடுத்த வாரம் வடக்கு வங்காளத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார்.
மம்தா பானர்ஜி அக்.17-ம் தேதி ஜல்பைகுரியை அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு அவர் உயர்மட்ட பிரமுகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்.
சமீபத்தில் சிலை கரைக்கும் நிகழ்ச்சியின்போது ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு வட வங்காளத்திற்கு முதல்வர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
அக்டோபர் 19-ம் தேதி சிலிகுரியில் உள்ள பிஜய சம்மிலானி நிகழ்ச்சியில் முதல்வர் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு வடக்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
படிக்க: இந்தியை திணிக்க முயன்றால் தில்லியில் போராட்டம்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
மேலும், பானர்ஜி தனது அரசின் மூத்த அதிகாரிகளுடன் சந்திப்புகளை நிகழ்த்தலாம் என்றும் மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் நிர்வாக சிக்கல்கள் குறித்து விவாதிக்கலாம் என்று வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.
அவர் அக்டோபர் 20ஆம் தேதி கொல்கத்தா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...