இந்தியை திணிக்க முயன்றால் தில்லியில் போராட்டம்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

மத்திய அரசு மீண்டும் இந்தியை திணிக்க முயன்றால் தில்லியில் போராட்டம் நடத்துவோம் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். 
இந்தியை திணிக்க முயன்றால் தில்லியில் போராட்டம்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

மத்திய அரசு மீண்டும் இந்தியை திணிக்க முயன்றால் தில்லியில் போராட்டம் நடத்துவோம் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். 

இந்தி திணிப்பு, கல்லூரிகளில் ஒரே நுழைவுத் தேர்வு ஆகியவற்றை எதிர்த்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், திமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டுள்ளனர். 

இதுபோன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 

இந்நிலையில் சென்னையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், 'தமிழ்நாட்டு மக்கள் எந்த வகையிலும் உங்கள் இந்தித் திணிப்பை ஏற்க மாட்டார்கள். திமுக எந்தப் போராட்டத்தை முன்னெடுத்தாலும் வெற்றி தான். இந்தி திணிப்பை எதிர்த்து இது முதற்கட்டப் போராட்டம் தான். மீண்டும் இந்தியை திணிக்க முயன்றால் தில்லி சென்று போராட்டம் நடத்துவோம். இந்தி எந்த வடிவில் வந்தாலும் 'இந்தி தெரியாது போடா' என்பதுதான் எங்களது பதில்

2019 தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவை விரட்டியடித்தது போல, 2024 தேர்தலிலும் விரட்டியடிப்பார்கள். ஏனெனில் முன்பு போல் இங்கு ஆட்சியில் இருப்பது எடப்பாடி பழனிசாமி அல்ல. இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி' என்று பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com