வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்: தீபாவளியை தாக்குமா?

தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சியானது புயல் சின்னமாக உருமாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்: தீபாவளியை தாக்குமா?
வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்: தீபாவளியை தாக்குமா?

புவனேஸ்வரம்: தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சியானது புயல் சின்னமாக உருமாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, வங்கக் கடலில் தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்தியப் பகுதிகளை ஒருங்கிணைத்து நிலவும் வளிமண்டல சுழற்சியானது அடுத்த 24 மணி  நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருமாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது மேலும் வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அக்டோபர் 22ஆம் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.

தாழ்வு மண்டலமாக வலுவடைந்த பிறகு அது புயல் சின்னமாக மாறி வங்கக் கடலில் மத்திய - மேற்கு பகுதியில் நிலைகொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் வளிமண்டல சுழற்சி புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், தற்போதைக்கு அதன் பாதை இதுவரை கணிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறிய பிறகே இதுபற்றி மேலும் தகவல்களை கணிக்க முடியும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, புயல் சின்னம் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், ஒடிசா மாநில அரசு, அதன் ஊழியர்களுக்கு அக்டோபர் 23 முதல் 25ஆம் தேதி வரை அளித்த விடுமுறைகள் அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. எனவே, இது தீபாவளி பண்டிகை நேரத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com