கார்கேவின் வெற்றி காங்கிரஸின் வெற்றி: சசிதரூர்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேவின் வெற்றி காங்கிரஸின் வெற்றிதான் என சசிதரூர் தெரிவித்துள்ளார். 
சசிதரூர் - மல்லிகார்ஜுன கார்கே
சசிதரூர் - மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேவின் வெற்றி காங்கிரஸின் வெற்றிதான் என சசிதரூர் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டியது நாட்டிற்கு மிகவும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், குறைபாடுகளுக்கு அப்பாற்பட்டு காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. நீங்கள் தொடர்ச்சியான மாற்றத்தை விரும்பினால், தேர்தலில் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

மல்லிகார்ஜுன கார்கேவின் வெற்றி காங்கிரஸ் கட்சியின் வெற்றியாகவே பார்க்க வேண்டும். இது தனிநபர் சாந்த தேர்தல் அல்ல, கட்சிக்கான தேர்தல். கட்சியை வலுப்படுத்த வேண்டியது அவசியம். அதாவது நாட்டின் நலனுக்காக காங்கிரஸை வலுப்படுத்த வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com