பாசிசத்திற்கு எதிராக ஒற்றுமையோடு போராட வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

பணவீக்கமும் வேலையில்லா திண்டாட்டமும் நாட்டின் முக்கியப் பிரச்னையாக உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 
பாசிசத்திற்கு எதிராக ஒற்றுமையோடு போராட வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே


பணவீக்கமும் வேலையில்லா திண்டாட்டமும் நாட்டின் முக்கியப் பிரச்னையாக உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 

காங்கிரஸில் ஏற்றத்தாழ்வு இல்லையென்றும், பாசிச மற்றும் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக அனைவரும் ஒற்றுமையோடு இணைந்து போராட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மல்லிகார்ஜுன கார்கே முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, கடந்த 24 ஆண்டுகளாக சோனியா காந்தி கட்சியை வலுப்படுத்தினார். கட்சிக்காக தனது வாழ்க்கை அர்ப்பணித்துக்கொண்டார். சோனியா காந்தி தலைமையின் கீழ் இரண்டு முறை மத்தியில் ஆட்சி அமைத்துள்ளோம். கட்சி தொண்டர்கள் சார்பில் சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடன் போட்டியிட்ட சசிதரூருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். அவரை நான் நேரில் சென்று சந்தித்தேன். கட்சியை வலுப்படுத்துவது, முன்னேற்றப்பாதையில் எடுத்துச்செல்வது குறித்து அவருடன் விவாதித்தேன்.

காங்கிரஸ் கட்சியில் பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடு இல்லை. அனைவரும் தொண்டர்களாக இணைந்து கட்சிக்காக உழைக்க வேண்டும். ஜனநாயக சக்திக்கு எதிரான பாசிச மற்றும் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையோடு போராட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

அக்டோபர் 26ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவர் பொறுப்பேற்றுக்கொள்வார் எனவும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com