
உத்தரகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர்.
சாமோலியின் தரலி பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து பல வீடுகள் மீது பாறைகள் விழுந்ததில் 2 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
படிக்க: நடிகர் ஜெயம் ரவிக்கு கரோனா
பிந்தர் பள்ளத்தாக்கில் உள்ள பைங்கர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இரவு 1 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது என்று தரலி துணைப் பிரிவு நீதிபதி ரவீந்திர குமார் ஜுவந்த கூறினார்.