தீபாவளியை முன்னிட்டு தில்லியில் பலத்த பாதுகாப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் தில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் தில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

நகரம் முழுவதும் உள்ள மால்கள் மற்றும் சந்தைகள் போன்ற நெரிசலான பகுதிகளில் சீருடை மற்றும் மாற்று உடையில் போலீசார் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெண் காவலர் மற்றும் பிங்க் போலீசார் குழுக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சிசிடிவி கேமராக்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தில்லி துணை ஆணையர் சஞ்சய் அரோரா அனைத்து மூத்த அதிகாரிகளுக்கும் அந்தந்த மாவட்டங்களில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த உத்தரவிட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாந்தினி சௌக், ஆசாத்பூர் மற்றும் காஜிபூர் உள்ளிட்ட முக்கிய சந்தைகள், தில்லிக்கு வெளியிலிருந்து பலர் அடிக்கடி வந்து செல்வதால், காவல் துறையினர் கண்காணிப்பில் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்பாக சந்தைகள், வணிக வளாகங்கள், முக்கிய இடங்கள் மற்றும் நெரிசலான இடங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஷாப்பிங் செய்யும்போது தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதற்காக பார்வையாளர்களிடையே விழிப்புணர்வைப் பரப்புவதற்காக சரோஜினி நகர் சந்தையின் வழித்தடங்களில் கொடி அணிவகுப்பு மற்றும் தீவிர ரோந்து மேற்கொள்ளப்படுகிறது.

ஆசாத்பூர் மண்டி உள்ளிட்ட சந்தைகளுக்கு வரும் வாகனங்களைச் சோதனை செய்யும் பணியில் குழுக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வடமேற்கு மாவட்டத்தின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேகத்திற்குரிய நபர் அல்லது செயலைக் கண்டால் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கிடையில், எல்லையோர பகுதிகளில் நடமாட்டம் குறித்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com