பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

கார்கே தலைமையில் காங்கிரஸ் தேர்தல் குழுக் கூட்டம்

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கட்சியின் முதல் தேர்தல் குழுக் கூட்டம் நடைபெற்றது.

Published On :

புது தில்லி: காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கட்சியின் முதல் தேர்தல் குழுக் கூட்டம் நடைபெற்றது.

24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு-காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவரான மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராக இன்று காலை பொறுப்பேற்றார்.

காங்கிரஸ் கட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கார்கே, ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்திய நிலையில், கட்சி அலுவலகத்தில் மத்திய தேர்தல் குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

மல்லிகார்ஜுன தலைமையில் நடைபெற்ற முதல் தேர்தல் குழுக் கூட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.

அடுத்தடுத்து மாநில பேரவைத் தோ்தல்களில் தோல்வி கண்டு வரும் காங்கிரஸ், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவை எதிா்கொள்ள முடியாமல் போராடுகிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கா் என 2 மாநிலங்களில் மட்டுமே சொந்த பலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது.

விரைவில் குஜராத், ஹிமாசல பிரதேசத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இரு மாநிலங்களிலும் காங்கிரஸை ஆட்சியில் அமா்த்த வேண்டியதே அவரது முதன்மையான பொறுப்பாக பாா்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.