சாகர்: மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கடந்த 72 மணி நேரத்தில் மூன்று காவலாளிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், மக்கள் அனைவரும் இது சீரியல் சில்லரின் அட்டூழியமா அல்லது சைக்கோ கில்லரின் வேலையா என்று அச்சத்தில் உறைந்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சாகர் மாவட்டத்தில் நான்கு காவலாளிகள் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கடந்த 3 கொலைகள் மட்டும் 72 மணி நேரத்தில் நடந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க.. மீண்டும் மலர்கிறதா அனார்கலி - சலீம் காதல் கதை?
இது குறித்து காவலர்கள் கூறுகையில், கட்டடத்துக்கு வெளியே உறங்குவர்கள்தான் கொலையாளியின் குறியாக இருக்கிறார்கள். கொலைக்கு சுத்தி, பெரிய கல் போன்றவை பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
முதல் காவலாளி, தொழிற்சாலைக்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த போது சுத்தியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது சம்பவம், கல்லூரி வாயிலில் பணியில் இருந்த காவலாளி மிகப்பெரிய கல்லைக் கொண்டு தாக்கிக் கொலை செய்யப்பட்டார். புதன்கிழமை இரவு மற்றொரு காவலாளி மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மண்டை ஓடு உடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிக்க.. இவர்களைப் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.25 லட்சம்: அறிவித்தது என்ஐஏ
இதற்கு முன்பு, கடந்த மே மாதம் மக்ரோனியா ரயில் நிலைய மேம்பாலத்துக்குக் கீழே உறங்கிக் கொண்டிருந்த மற்றொரு காவலாளி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து கொலையாளியைத் தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


