மீண்டும் மலர்கிறதா அனார்கலி - சலீம் காதல் கதை?

மிகவும் புகழ்பெற்ற சலீம் - அனார்கலி காதல் கதையை விஞ்சும் அளவுக்கு மத்தியப் பிரதேசத்தில் சலீம் - அனார்கலி காதல் ஜோடி ஒன்று உருவாகி வருகிறது. இந்த காதல் மலர்ந்திருப்பதோ வனப்பகுதிக்குள்.
மீண்டும் மலர்கிறதா அனார்கலி - சலீம் காதல் கதை? (கோப்பிலிருந்து)
மீண்டும் மலர்கிறதா அனார்கலி - சலீம் காதல் கதை? (கோப்பிலிருந்து)


போபால்: மிகவும் புகழ்பெற்ற சலீம் - அனார்கலி காதல் கதையை விஞ்சும் அளவுக்கு மத்தியப் பிரதேசத்தில் சலீம் - அனார்கலி காதல் ஜோடி ஒன்று உருவாகி வருகிறது. இந்த காதல் மலர்ந்திருப்பதோடு வனப்பகுதிக்குள்.

போபாலில் உள்ள பாதவ்கார் புலிகள் சரணாலய அதிகாரிகளும், உமாரியா தேசிய வனவிலங்குப் பூங்கா அதிகாரிகளும் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.

காரணம், தங்களது நம்பிக்கைக்குப் பாத்திரமான, சிறப்பான பயிற்சி பெற்ற 58 வயதாகும் அனார்கலி யானைக்கும், 35 வயதாகும் கிராம மக்களால் சலீம் என பெயர் சூட்டப்பட்ட ஆண் யானைக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் காதல்தான் காரணம். 4 குட்டிகளுக்குத் தாயான அனார்கலி மீது, சலீமுக்கு ஏற்பட்ட காதல் மிகவும் விநோதமானது என்கிறார்கள் வனத்துறையினர்.

இது ஒருதலைக் காதல் அல்ல என்றும், அனார்கலி மற்றும் சலீம் இருவருமே ஒருவருக்கு ஒருவர் காதலிப்பதாகவும் கூறுகிறார்கள். இளம் காட்டு ஆண் யானையானது, தனது யானைக் கூட்டத்திலிருந்து நைசாக யாருக்கும் தெரியாமல் நழுவிச் சென்று, அவ்வப்போது அனார்கலியின் கூட்டத்தை வட்டமடித்து வருவதை வனத்துறையினர் இரண்டு அல்லது மூன்று முறை பார்த்துள்ளனர்.

இந்தக் காதல் ஜோடிகளின் லீலைகளை விவரிக்கும் வனத்துறையினர், சலீம், நான்கு குட்டிகளுக்குத் தாயான அனார்கலியை தனது தந்தத்தால் தள்ளுவதை பார்த்திருக்கிறார்களாம். அதன் பிறகு இரண்டு யானைகளும் காட்டுக்குள்ளேயே தலைமறைவாகிவிடுவார்களாம். பிறகு, 50 வயதாகும் அந்த பெண் யானை தள பகுதிகளில் உள்ள தனது முகாமுக்கு சப்தமில்லாமல் வந்து தங்கிவிடுமாம்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இந்த சரணாலயத்தில் வசித்த வரும் பெண் யானைக்கும், மிகவும் இளம் வயது ஆண் யானைக்கும் குட்டிகள் பிறந்தால் அவை மிகவும் ஆரோக்கியமான மற்றும் பலசாலிகளாக இருக்கும் என்று வனத்துறையினர் எதிர்பார்க்கிறார்கள்.

இருந்தாலும் இரண்டு யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். அனார்கலி, தனது கூட்டத்தைப் பிரிந்து சலீமின் கூட்டத்துக்குள் புகுந்துவிடும் அபாயம் இருப்பதையும் அவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

ஏனென்றால், ஒரு சில மாதங்களுக்கு முன்பு, எங்களிடம் நன்கு பயிற்சி பெற்ற 11 வயது பந்தாவி என்ற பெண் யானை, மற்றொரு கூட்டத்தில் இருந்த ஆண் யானையுடன் காதல் வசப்பட்டு, தனது கூட்டத்திலிருந்து பிரிந்து ஆண் யானையின் கூட்டத்துக்குச் சென்றது. ஆனால், அந்த யானைகள் பந்தாவியை ஏற்றுக் கொள்ளாததால், காதல் தோல்வியுடன் இரண்டு நாள்களுக்குப் பிறகு தனது கூட்டத்துக்கே திரும்பியது.

இங்கே அனார்கலியுடன் 4 மற்றும் ஒரு வயதாகும் இரண்டு குட்டிகளும் இருக்கின்றன. எனவே, அனார்கலி தனது குட்டிகளுடன், சலீமின் கூட்டத்துக்குச் சென்றால், அங்கு அந்த யானைக் கூட்டத்தால், குட்டிகளுக்கு ஆபத்து நேரிடும் அபாயம் இருக்கிறது என்கிறார்கள்.

புலிகள் சரணாலயத்தில் இருக்கும் பயிற்சி பெற்ற 14 யானைகளில் அனார்கலி பிகார் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது. மிகவும் பயிற்சி பெற்ற நம்பிக்கைக்குரிய யானையாக இருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com