ஆர்எஸ்எஸ்ஸை பாராட்டுவதா? மம்தாவிற்கு ஓவைசி கண்டனம் 

ஆர்எஸ்எஸ் அமைப்பைக் குறித்து மம்தா தெரிவித்த கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஓவைசி விமர்சனம் தெரிவித்துள்ளார். 
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி

ஆர்எஸ்எஸ் அமைப்பைக் குறித்து மம்தா தெரிவித்த கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஓவைசி விமர்சனம் தெரிவித்துள்ளார். 

ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சைகளை எதிர்க்கட்சிகளிடையே ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மம்தா பானர்ஜி பேசியுள்ள விடியோவில் அவர், “ஆர்எஸ்எஸ் அமைப்பு இப்படி மோசமாக இருந்ததில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பு மோசமானதாக நான் கருதவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பில் பல நல்ல மனிதர்கள் உள்ளனர். அவர்கள் பாஜகவை ஆதரிக்கவில்லை. அவர்கள் ஒருநாள் தங்களது மெளனத்தைக் கலைப்பர்” எனத் தெரிவித்துள்ளார். 

மம்தா பானர்ஜியின் இந்தக் கருத்து சர்ச்சையாகியுள்ளது. மம்தாவின் இந்தக் கருத்துக்கு மக்களவை உறுப்பினர் ஓவைசி விமர்சனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில், “2003ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்வில் திரிணமூல் கட்சியின் தலைவர் அந்த அமைப்பை பாராட்டிப் பேசினார். ஆர்எஸ்எஸ் அமைப்பு வரலாறு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதாகவே இருந்து வந்துள்ளது. இவ்வளவு வெளிப்படையான நேர்மையான மம்தாவின் பேச்சுக்கு அவரது இஸ்லாமிய தலைவர்கள் அவரை பாராட்டுவார்கள் என நம்புகிறேன்” என விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்க அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள், இதர ஊழியர்கள் பணி நியமனத்தில் நடந்த முறைகேட்டு வழக்கில் திரிணமூல் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com