சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பது மக்கள் நன்மைக்குத்தான்: வைரல் ஆகும் விடியோ

சத்தீஸ்கர் மாநில அமைச்சர் டாக்டர் பிரேம்சாய் சிங் டேகம் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.
சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பது மக்கள் நன்மைக்குத்தான்: வைரல் ஆகும் விடியோ


புது தில்லி: சத்தீஸ்கர் மாநில அமைச்சர் டாக்டர் பிரேம்சாய் சிங் டேகம் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது. சாலை விபத்து மற்றும் மதுபானம் குறித்து அமைச்சர் அளித்த இரண்டு பேட்டிகளும் சமூக வலைத்தளத்தில் பட்டையைக் கிளப்பி வருகிறது.

அந்த விடியோக்களில் ஒன்றில், அமைச்சர் பிரேம்சாய் கூறியிருப்பது என்னவென்றால், மோசமாக இருக்கும் சாலைகளில் எப்போதுமே சாலை விபத்துகள் நேரிடாது, நன்றாக இருக்கும் சாலைகளில்தான் சாலை விபத்துகள் நேரிடுகின்றன என்ற இன்றைய தத்துவம்தான் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதாவது அவர் கூறிவருவது என்னவென்றால், சாலைகள் மோசமாக இருப்பதாக ஏராளமான புகார்கள் எங்களுக்கு வருகின்றன. ஆனால், அதுபோன்ற சாலைகளில் விபத்துகளே நேரிடுவது இல்லை. சிறப்பாக இருக்கும் சாலைகளில்தான் விபத்துகள் நேரிடுகின்றன. ஏனென்றால், நல்ல சாலைகளில் மக்கள் வேகமாகப் பயணிப்பார்கள். அதனால் விபத்துகள் நேரிடும் என்று கூறியுள்ளார்.

இது இப்படியிருக்க, மதுப்பழக்கம் குறித்த அவரது அற்புதமான அடுத்த கருத்து மேலும் பலரையும் கவர்ந்துள்ளது. 

அதுபற்றி அவர் திருவாய் மலர்கையில், மக்கள் அனைவருமே மதுப்பழக்கத்தால் ஏற்படும் கேடுகளைப் பற்றி மட்டும்தான் பேசுகிறார்கள். ஆனால், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து யாருமே பேசுவதில்லை. மதுப்பழக்கம் குறித்து நாம் பேசும்போது, அதனை எவ்வாறு சரியாக குடிக்க வேண்டும் என்பது குறித்தும் சொல்ல வேண்டும். அது நீரில் கரையும் விகிதம் மற்றும் சரியான அளவில் மதுவை நீருடன் கலக்கும் விகிதம் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் பேசியிருப்பது எங்கு என்று பார்த்தால், மதுப்பழக்கத்திலிருந்து மீள்வோருக்கான நிகழ்ச்சியில்தான் என்கிறது மேற்கோள்கள்.

ஆனால், அவர் இந்த உரைகளை எப்போது ஆற்றினார் என்பது குறித்தோ எங்கே பேசினார் என்பது குறித்து பதிவுகளில் எதுவும் இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com