பருவமழையால் சேதமடைந்த சாலைகளை சரி செய்யுங்கள்: அசோக் கெலாட்

பருவமழையின்போது சேதமடைந்த சாலைகளை அதிகாரிகள் விரைந்து சரி செய்ய வேண்டும் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
பருவமழையால் சேதமடைந்த சாலைகளை சரி செய்யுங்கள்: அசோக் கெலாட்

பருவமழையின்போது சேதமடைந்த சாலைகளை அதிகாரிகள் விரைந்து சரி செய்ய வேண்டும் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் பல்வேறு சாலைத் திட்டங்களை தொடக்கி வைத்துப் பேசிய அவர் இதனை தெரிவித்தார். அதேபோல பருவமழையினால் ஜோத்பூர் போன்ற நகரங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார். சாலைகள் அதிகாரிகளால் சரிவர பராமரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசியதாவது: “ மாநிலத்தில் உள்ள சாலைகளை சீரமைக்க வருகிற செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 20 வரை சிறப்பு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். இந்த பிரசாரத்தின்போது மாநிலத்தில் பருவமழையின்போது சேதமடைந்த சாலைகள் சரி செய்யப்படும். சாலை உள்கட்டமைப்பு சிறப்பாக இருப்பது எங்களது மிக முக்கிய நோக்கமாகும். அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் சாலை மேம்பாட்டில் அதிக கவனம் கொடுக்க வேண்டும்.

அண்மையில் குஜராத் மாநிலத்திற்கு சென்றிருந்தபோது அங்கு சாலைகளின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. கடந்த 20 ஆண்டுகளில் ராஜஸ்தானில் சாலைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் சாலை விபத்துகளை குறைப்பது குறித்தும் திட்டங்களை தயார் செய்ய வேண்டும். இது குறித்து அரசு சார்பிலும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.

அரசின் பல்வேறு துறைகளிலும் செயல்படுபவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது அரசின் சுமைகள் குறைக்கப்படும். மக்களும் நிம்மதியடைவார்கள். இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்துள்ளதால் விவசாயம் நன்றாக இருக்கும். கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் விளைச்சல் அதிகமாக இருக்கும்.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com