இதுதான் எனது புதிய கட்சியின் முக்கிய நோக்கம், குலாம் நபி ஆசாத் அதிரடி

காங்கிரஸில் இருந்து அண்மையில் விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தைத் திரும்ப பெறுவதே தனது புதிய கட்சியின் முக்கிய நோக்கமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இதுதான் எனது புதிய கட்சியின் முக்கிய நோக்கம், குலாம் நபி ஆசாத் அதிரடி

காங்கிரஸில் இருந்து அண்மையில் விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தைத் திரும்ப பெறுவதே தனது புதிய கட்சியின் முக்கிய நோக்கமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸில் இருந்து விலகிய பிறகு குலாம் நபி ஆசாத் முதல் முறையாக பேரணி ஒன்றில் இன்று (செப்டம்பர் 4) கலந்து கொண்டார். ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை திரும்பப் பெறுவது, ஜம்மு-காஷ்மீரில் உள்ளவர்களின் உரிமைகள் மற்றும் வேலைவாய்ப்பினை பாதுகாப்பது, நிலத்தின் மீதான அவர்களது உரிமையைப் பாதுகாப்பது மற்றும் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு மீண்டும் காஷ்மீரில் அமைதியாக வாழ ஏற்பாடு செய்வது போன்றவை அவர் தொடங்கவுள்ள புதிய கட்சியின் முக்கிய நோக்கமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.


ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வராக இருந்துள்ள குலாம் நபி ஆசாத்துக்கு அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். காங்கிரஸில் இருந்து விலகிய பல்வேறு முக்கியத் தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அவருடன் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

ஜம்முவின் சைனிக் காலனியில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு குலாம் நபி ஆசாத் பேசியதாவது: “ ஜம்மு-காஷ்மீர் மக்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் அரசியல் தலைவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டதற்கு பின்பே எனது புதிய கட்சியின் பெயரை அறிவிப்பேன். எனது புதிய கட்சி ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தைத் திரும்பப் பெறுவதில் முதலில் முக்கியத்துவம் கொடுக்கும். பின்னர், ஜம்மு-காஷ்மீரில் உள்ள மக்களின் உரிமைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும்.” என்றார்.

73 வயதாகும் குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் 50 ஆண்டுகளாக இருந்துள்ளார். அவர் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி காங்கிரஸ் முழுவதுமாக அழிந்து வருகிறது எனவும், ராகுல் காந்தி அதனை அழித்து வருகிறார் எனவும் குற்றம் சாட்டி காங்கிரஸ் உடனான 50 ஆண்டுகால உறவை முறித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com