
உத்தரப் பிரதேசத்தில் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்ய வற்புறுத்தப்பட்ட விடியோ வைரலானதால் அந்தப் பள்ளியின் முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அடிப்படை கல்வி அலுவலர் மணிராம் சிங் கூறியதாவது: “ மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்ய வற்புறுத்தப்படும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த விடியோவில் இடம் பெற்றுள்ள பள்ளி உத்தரப் பிரதேசத்தின் சோஹயோன் பகுதியைச் சேர்ந்ததாகும். அந்தப் பள்ளியின் முதல்வர் மிரித்யுன்ஜே சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.” என்றார்.
இதையும் படிக்க: 3-வது டெஸ்ட் தொடர்ந்து நடைபெற வேண்டும்: ஸ்டோக்ஸ் விருப்பம்
வைரலாகி வரும் அந்த விடியோவில், பள்ளியில் உள்ள சில குழந்தைகள் சிலர் கழிப்பறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்களின் அருகில் ஒருவர் அந்தக் குழந்தைகளை திட்டிக் கொண்டு இருக்கிறார். அவர்கள் சரியாக கழிப்பறையை சுத்தம் செய்யாவிட்டால் கழிப்பறையிலேயே வைத்து பூட்டி விட்டு சென்று விடுவேன் என அந்த நபர் அச்சுறுத்தியதும் விடியோவில் பதிவாகியுள்ளது.