நாக்கை அறுத்து கடவுளுக்கு காணிக்கையாக்கிய பக்தர் மருத்துவமனையில் அனுமதி

நாக்கை அறுத்து கடவுளுக்கு காணிக்கையாக்கிய பக்தர் மருத்துவமனையில் அனுமதி

உத்தரப் பிரதேசத்தில் பக்தர் ஒருவர் தனது நாக்கை அறுத்து கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
Published on

உத்தரப் பிரதேசத்தில் பக்தர் ஒருவர் தனது நாக்கை அறுத்து கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறியதாவது: “ இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள நபர் உத்தரப் பிரதேசத்தின் கௌசாம்பி பகுதியைச் சேர்ந்த சம்பத் (38 வயது) என்பது தெரிய வந்துள்ளது. சம்பத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. சம்பத் அவருடைய மனைவி பனோ தேவியுடன் மா ஷீத்லா கோயிலுக்கு வந்துள்ளார். அவர்கள் அங்கு கடவுளை வணங்கிவிட்டு கங்கையில் நீராடி உள்ளனர். அதன் பின்னர் இருவரும் கோயிலைச் சுற்றி வந்துள்ளனர். சம்பத் கோயில் கதவில் இருந்த கத்தியினை எடுத்து அவரது நாக்கை அறுத்துள்ளார்.” என்றனர்.

இது குறித்து அவரது மனைவியிடம் விசாரித்தபோது, நேற்று (செப்டம்பர் 9) தனது கணவர் இந்த கோயிலுக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்ததாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com