
கோப்புப்படம்
உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது என்று வாராணசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்துக்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுக்கலாமா என்பது குறித்த வழக்கில், அதனை எதிர்த்து ஞானவாபி மசூதி குழு தாக்கல் செய்த பதில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையும் படிக்க | உங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது? எளிதாக அறியலாம்
உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததா என்பது தொடா்பான தீா்ப்பை மாவட்ட நீதிமன்றம் இன்று பிறப்பித்தது. இதனை முன்னிட்டு வாராணசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தீவிர காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
காசி விஸ்வநாதா் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள ஹிந்து கடவுள் சிலைகளை வழிபட அனுமதிக்கக் கோரி தில்லியைச் சோ்ந்த 5 பெண்கள் மனு தாக்கல் செய்திருந்தனா்.
மசூதிக்குள் ஆய்வு நடத்தி விடியோ பதிவு செய்ய நீதிமன்றம் ஒரு குழு அமைத்தது. அப்போது மசூதியின் நுழைவாயிலில் அமைந்துள்ள நீா் தேக்கும் தொட்டியில் சிவலிங்கம் இருப்பதாக அந்தக் குழு தெரிவித்ததால் பெரும் சா்ச்சை எழுந்தது.
இதையும் படிக்க | ஆண் குழந்தைக்கு அம்மாவான சௌந்தர்யா ரஜினிகாந்த் - பெயர் என்ன தெரியுமா ?
இந்த வழக்கை எதிா்த்து முஸ்லிம் தரப்பினா் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் இதுகுறித்து விசாரித்து முடிவு செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில், ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததில்லை என்று மசூதியின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மாவட்ட நீதிமன்றம் முதலில் விசாரணை நடத்தி வந்தது. இதில் இரு தரப்பினரின் வாதம் முடிவடைந்ததையடுத்து செப்டம்பா் 12-ஆம் தேதி வரை தீா்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
இன்று வழக்கில் தீர்ப்பளித்த மாவட்ட நீதிமன்றம்,
ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.