நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,389 ஆக அதிகரிப்பு

நாட்டில் ஒரேநாளில் புதிதாக 6,422 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,389 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,389 ஆக அதிகரிப்பு

புது தில்லி: நாட்டில் ஒரேநாளில் புதிதாக 6,422 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,389 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,422 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,45,16,479 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,389 ஆகவும் அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.10 சதவீதமாக உள்ளது. 

மேலும், 14 பேர் கரோனாவுக்கு உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 5,28,250 ஆக உள்ளது. இறந்தோரின் விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது. மகாராஷ்டிரம், பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு பேர் இறந்துள்ளனர். 

கரோனாவிலிருந்து மேலும் 5,748  போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,39,41,840 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.71 சதவீதமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 2,15,98,16,124 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 31,09,550 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com