குழந்தைகள் பவுடர் தயாரிப்பு: ஜான்சன் நிறுவன உரிமம் ரத்து

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகள் பவுடர் தயாரிப்புக்கான உரிமத்தை மகாராஷ்டிர அரசு ரத்து செய்ததுள்ளது.
குழந்தைகள் பவுடர் தயாரிப்பு: ஜான்சன் நிறுவன உரிமம் ரத்து

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகள் பவுடர் தயாரிப்புக்கான உரிமத்தை மகாராஷ்டிர அரசு ரத்து செய்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் உணவு மற்றும் மருந்து நிர்வாகம்(FDA), ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் குழந்தை பவுடர் உற்பத்தி உரிமத்தை பொது சுகாதார நலன் கருதி ரத்து செய்துள்ளது.

ஜான்சன் நிறுவனத்தின் குழந்தை பவுடர், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தோலை பாதிக்கலாம் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஆய்வக சோதனையின் போது குழந்தைகளுக்கான பவுடர்  மாதிரிகள் நிலையான pH மதிப்புக்கு ஒத்துபோகவில்லை என்று கட்டுப்பாட்டாளர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள  மத்திய மருந்து ஆய்வகத்தின் உறுதியான அறிக்கையின் முடிவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து, எஃப்டிஏ, ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனத்திற்கு மருந்து  மற்றும் அழகுசாதன பொருள் சட்டம் 1940 மற்றும் விதிகளின் கீழ் ஒரு  நோட்டீஸை அனுப்பியது. மேலும் சந்தையில் இருக்கும் குழந்தை பவுடர் இருப்பை திரும்பப் பெறுமாறு நிறுவனத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com