ஜூனியர் உலக சாம்பியன் ஆன தமிழகத்தின் 12 வயது இளம்பரிதி
By DIN | Published On : 17th September 2022 01:37 PM | Last Updated : 17th September 2022 01:37 PM | அ+அ அ- |

உலக இளையோர் செஸ் போட்டிகளில் இரு இந்திய வீரர்கள் சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்கள்.
இந்தியாவின் 76-வது செஸ் கிராண்ட்மாஸ்டரான 15 வயது பிரணவ் ஆனந்த், உலக யு-16 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கர்நாடகத்தைச் சேர்ந்த பிரணவ் ஆனந்த், வேர்ல்ட் யூத் 2022 போட்டியில் 11 ஆட்டங்களில் 9 புள்ளிகளை எடுத்தார். அதேபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது இளம்பரிதி யு-14 உலக சாம்பியன் ஆகியுள்ளார். 11 ஆட்டங்களில் 9.5 புள்ளிகளை அவர் எடுத்து வெற்றி பெற்றார். இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இளம்பரிதிக்குப் பிரபல செஸ் வீரர் அனிஷ் கிரி, ரூ. 2 லட்சம் வழங்கியுள்ளார்.
Congratulations Ilamparthi A R...World Under-14 Champion!!@DrSK_AICF @Bharatchess64 @IndiaSports@Media_SAI @ianuragthakur @PMOIndia @rashtrapatibhvn pic.twitter.com/4QQ9vnQNeR
— All India Chess Federation (@aicfchess) September 17, 2022