மோடி அரசு கொண்டுவந்த 8 சிறுத்தைகள் இவைதான்! - மல்லிகார்ஜுன கார்கே தாக்கு

வேலையின்மை, பணவீக்கம், வறுமை, பசி, வகுப்புவாதம், வெறுப்பு, வன்முறை, அடக்குமுறை ஆகிய எட்டு சிறுத்தைகளை இந்திய மக்களுக்காக மோடி அரசு திறந்துவிட்டுள்ளதாக கார்கே கூறியுள்ளார். 
மோடி அரசு கொண்டுவந்த 8 சிறுத்தைகள் இவைதான்! - மல்லிகார்ஜுன கார்கே தாக்கு

வேலையின்மை, பணவீக்கம், வறுமை, பசி, வகுப்புவாதம், வெறுப்பு, வன்முறை, அடக்குமுறை ஆகிய எட்டு சிறுத்தைகளை இந்திய மக்களுக்காக மோடி அரசு திறந்துவிட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். 

நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கையை மீண்டும் அதிகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக தென்மேற்கு ஆப்பிரிக்காவின் நமீபியாவிலிருந்து 5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன. பிரதமர் நரேந்திரமோடி தனது பிறந்தநாளன்று(செப்.17) இந்த சிறுத்தைகளை பூங்காவில் விடுவித்தார்.  

இந்நிலையில் இதனை வைத்து, காங்கிரஸ் மூத்த தலைவரும் கட்சி எம்.பி.யான மல்லிகார்ஜுன கார்கே பாஜக அரசை விமர்சித்துள்ளார்.

கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், 'மோடி அரசால் கொண்டு வரப்பட்ட எட்டு சிறுத்தைகள்...

வேலையின்மை, பணவீக்கம், வறுமை, பசி, வகுப்புவாதம், வெறுப்பு, வன்முறை, அடக்குமுறை ஆகியவை. 

இந்த எட்டு சிறுத்தைகளும் இந்திய மக்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளன' என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பாஜகவின் ஜெய்ராம் ரமேஷ், பல ஆண்டு கால முயற்சியில் 8 சிறுத்தைகள் வரவழைக்கப்பட்டுள்ளதாகக் கூறியதற்கு பதில் அளிக்கும் விதமாக மல்லிகார்ஜுன கார்கே இவ்வாறு பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com