மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க புதிய இணையதளம்: மணிப்பூர் முதல்வர்

பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்.

News image

கோப்புப்படம்

Updated On :19 செப்டம்பர் 2022, 11:51 am

பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்.

இந்த இணையதளத்தில் ஊழல் தடுப்பு பிரிவுக்கான தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

இது முக்கியமாகப் பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கும், ஊழல் தொடர்பான பிரச்னைகளை பதிவு செய்வதற்கும் பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி தங்கள் குறைகளைப் பதிவு செய்யலாம். மேலும் ஊழல் தொடர்பான பிரச்னைகளை எழுப்புவதற்கான ஏற்ற தளமாக இது அமையும் என்று முதல்வர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இது நிர்வாகத்திலும் பொதுச் சேவைகளை வழங்குவதிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையைக் கொண்டு வர எங்களுக்கு மேலும் உதவும் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.