உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக மலைப்பாதைக்கு நடுவே ராஜஸ்தானைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கிக் கொண்டனர்.
மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பயணிகள் மேற்கொண்டு பயணத்தைத் தொடர முடியாமல், நடுவழியில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
இதையும் படிக்க.. வீட்டுக் காவலில் சீன அதிபர்? இணையதளத்தில் பரவும் செய்தியால் இந்தியாவுக்கு ஆபத்தா?
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா, அஜ்மீர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கங்கோத்ரி தாம் கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.
வியாழக்கிழமை இரவு முழுக்க அவர்கள் மலைப்பாதையில் சிக்கிக் கொண்டதாக மாநில பேரிடர் மீட்புப் படை தரப்பில் கூறப்பட்டது. அவர்கள் பாதுகாப்பாக தங்கவும், உணவுப் பொருள்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
நிலச்சரிவில் சிக்கிக் கொண்டவர்கள் எடுத்த விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.