புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அதிவேகப் பயணம்.. சாலை விபத்தில் பிரபல யூடியூபர் பலி

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்ற பிரபல யூடியூபர் சாலை விபத்தில் பலியானார்.

News image

அபியுதேய் மிஸ்ரா

Updated On :30 செப்டம்பர் 2022, 11:23 am

DIN

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்ற பிரபல யூடியூபர் சாலை விபத்தில் பலியானார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் அபியுதேய் மிஸ்ரா. இவர் ‘ஸ்கைலார்ட்’(skylord) என்கிற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் பப்ஜி மற்றும் இணைய கேம்களை எளிதாக விளையாடுவதற்கான முறைகளைக் கூறிவந்துள்ளார். 

இதனால், விரைவிலேயே அவருடைய யூடியூப் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 16 லட்சமாக உயர்ந்தது. இதன் மூலம் நல்ல வருவாயும் வந்ததால் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை வாங்கி அதில் பயணங்களை மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் போபாலிலிருந்து சோஹாக்பூர் அருகே உள்ள நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, எதிரே வந்த லாரியின் மீது மோதிய அபியுதேய் சம்பவ இடத்திலேயே பலியானார்.

யூடியூப் மட்டுமல்லாது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.

அபியுதேய் மிஸ்ராவின் திடீர் இழப்பு அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.