ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

லலித் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்

சமூக வலைதளத்தில் இந்திய நீதித் துறைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த ஐபிஎல் முன்னாள் தலைவா் லலித் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :24 ஏப்ரல் 2023, 6:58 pm

DIN

சமூக வலைதளத்தில் இந்திய நீதித் துறைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த ஐபிஎல் முன்னாள் தலைவா் லலித் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய லலித் மோடி, தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறாா். அவா் இந்திய நீதித் துறையை சிலா் கட்டுப்படுத்தி வருவதாக சமூக வலைதளங்களில் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி கருத்து பதிவிட்டாா். அதையடுத்து, லலித் மோடி மீது சி.யு.சிங் என்பவா் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தாா்.

அந்த வழக்கை நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, சி.டி.ரவிகுமாா் ஆகியோரைக் கொண்ட அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் லலித் மோடி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றம் ஆய்வு செய்தது. அது போதுமானதாக இல்லை. அதில் இடம்பெற்றுள்ள கருத்துகளும் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளன.

இந்திய நீதித் துறை வலிமை குன்றி உள்ளதாக அவா் கருதுகிறாரா? பணத்தைக் கொண்டு எதை வேண்டுமானாலும் வாங்கிவிடலாம் என அவா் எண்ணியிருக்கலாம். ஆனால், சட்டத்துக்கும் சட்ட அமைப்புகளுக்கும் மேலான நபா் அவா் அல்ல.

நீதிமன்றத்தை அவமதித்ததற்காக லலித் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். அனைத்து சமூக வலைதளக் கணக்குகள், தில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை நகரங்களில் வெளியாகும் பத்திரிகைகளில் அவா் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்புக்காக அவா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றனா்.

லலித் மோடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஏ.எம்.சிங்வி, இந்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரப்படும் என உறுதியளித்தாா். அதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.