ஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!சென்னை போக்சோ நீதிமன்றத்தில் வீரமணி ஆஜர்!அரிசி விலை உயர்வு இன்னும் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டவில்லை போலும்! பெ. சண்முகம்பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்! மக்களிடம் மனுக்களைப் பெற்றார்!மாதவரம் ஆவின் பால் பண்ணை ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!‘தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்

நாட்டில் கரோனா பாதிப்பு இன்று குறைவு! 10,753 பேருக்குத் தொற்று!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 10,753 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பை விட இன்றைய கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. 

கோப்புப் படம்

Published On :

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 10,753 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பை விட இன்றைய கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. 

சனிக்கிழமை நேற்று (ஏப்.15) 1,386 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 5 பேர் உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. எனினும், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 53,720- ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இதனால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை  5,31,091 ஆக அதிகரித்துள்ளது. 

இதில் அதிகபட்சமாக தில்லியில் 6 பேரும், அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 4 பேரும், ராஜஸ்தானில் 3 பேரும் உயிரிழந்தனர். 

சத்தீஸ்கர், குஜராத், ஹிமாசல், ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசத்தில் தலா ஒருவர் உயிரிழந்தனர். 

மத்திய சுகாதாரத் துறை தரவுகளின்படி 4.42 கோடி பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.