காமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்பு6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

‘பிரியமுடன் ஜோசப் விஜய்’... மாணவர்களின் பெற்றோருக்கு முதல்வர் பெயரில் குறுஞ்செய்தி!

காலை உணவுத்திட்ட மாணவர்களின் பெற்றோருக்கு முதல்வர் விஜய் பெயரில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதைப் பற்றி...

முதல்வர் விஜய்.

Published On :

காலை உணவுத்திட்ட மாணவர்களின் பெற்றோருக்கு முதல்வர் விஜய் பெயரில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ச. ஜோசப் விஜய் சென்னை திருவான்மியூரில் உள்ள அரசுப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை (செப். 22) தொடங்கி வைக்கவுள்ளார்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் ஊட்டச்சத்து, உடல்நலம், வருகைப் பதிவு, கற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் ‘முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை’ முதல்முறையாக 15.9.2022-இல் அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் மதுரையில் உள்ள அரசுப் பள்ளியில் தொடங்கி வைத்தார். இதையடுத்து, இந்தத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்தத் திட்டமானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களும் பயன் பெறும் வகையில் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயரில் விரிவுபடுத்தப்படும் என தவெக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், இன்று (செப். 22) காலை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவுப்படுத்தப்படுவதை ஒட்டி முதல்வர் ச. ஜோசப் விஜய் பெயரில், பள்ளி மாணவர்களின் பெற்றோர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் பெயரில் வெளியான குறுஞ்செய்தியில், “அன்பார்ந்த பெற்றோருக்கு, வணக்கம். பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகைபுரிந்து, சிறப்பாகக் கல்வி கற்பதற்கு ஏதுவாக சத்தான, சுவையான காலை உணவு 22.9.2026 (செவ்வாய்க்கிழமை) முதல் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பிரியமுடன், ச. ஜோசப் விஜய், தமிழ்நாடு முதல்வர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Story image

Summary

Text messages have been sent to the parents of students in the breakfast scheme in the name of Chief Minister Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.