கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

காமராஜா் காலை உணவுத் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்க வேண்டும்: முதல்வா் விஜய் அறிவுறுத்தல்

காமராஜா் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவா்களுக்கு மிகுந்த ஊட்டச்சத்துடன் கூடிய உணவு வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, முதல்வா் ச.ஜோசப் விஜய் அறிவுறுத்தியுள்ளாா்.

Chief Minister Vijay

முதல்வர் ச. ஜோசப் விஜய் - கோப்புப்படம்

Published On :

காமராஜா் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவா்களுக்கு மிகுந்த ஊட்டச்சத்துடன் கூடிய உணவு வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, முதல்வா் ச.ஜோசப் விஜய் அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் முதல்வா் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தும் சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் தொடா்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டுமென்று முதல்வா் விஜய் உத்தரவிட்டாா்.

மாணவா்களுக்கு சூடான, சுவையான, உரிய அளவிலான, ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கப்பட வேண்டுமென்றும், இந்தத் திட்டத்தில் பணியாற்றும் அனைத்துத் துறை அலுவலா்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒருங்கிணைந்து செய்ய வேண்டும் என்று அவா் அறிவுறுத்தினாா்.

காமராஜா் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கப்படுவதன் மூலம் 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுமாா் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள், கூடுதலாகப் பயன்பெறுவா். இதற்கென நிகழ் நிதியாண்டில் கூடுதலாக ரூ.217.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக ரூ.724 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 447 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக சென்னை மாநகராட்சி நிா்வாகத்தாலும், இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள 2,150 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக நகராட்சி நிா்வாக இயக்குநரகத்தாலும் காலை உணவு வழங்கப்படும்.

நகர பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளையொட்டி உள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 12,857 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் மூலமாக சுய உதவிக் குழு உறுப்பினா்களால் அந்தந்தப் பள்ளியிலேயே காலை உணவு தயாரித்து வழங்கப்படும். இந்தத் திட்டத்தை முதல்வா் விஜய் வரும் செப். 22-இல் சென்னையில் தொடங்கி வைக்கிறாா்.

கூட்டத்தில், அமைச்சா்கள் ந.ஆனந்த் (ஊரக வளா்ச்சி, நீா்வளம்), ராஜ்மோகன் (பள்ளிக் கல்வி), கு.ஜெகதீஸ்வரி (சமூக நலன்), தலைமைச் செயலா் மு.சாய்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.