மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சத்தீஸ்கரில் துப்பாக்கிச்சூடு: மாவோயிஸ்ட் பலி, 2 பேர் கைது!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் ஒருவர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தா

News image

கோப்புப்படம்

Updated On :18 ஏப்ரல் 2023, 6:15 am

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் ஒருவர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

மாநிலத் தலைநகர் ராய்பூரிலிருந்து 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ள நைமேட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கச்லாவரி கிராமத்திற்கு அருகே மாவட்ட காவலர்கள் குழு தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, காலை 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. 

சம்பவ இடத்தில் துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்த மாவோயிஸ்ட் உடல் மீட்கப்பட்டது. காயமடைந்த மாவோயிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.