இரண்டு நாள் பயணமாக கர்நாடகம் வருகிறார் அமித் ஷா!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வெள்ளிக்கிழமை பெங்களூரு வருகிறார் என்ற தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு அவர் கர்நாடகத்துக்கு வருவது இதுவே முதல்முறையாகும். இதனால் கட்சியிலிருந்து மூத்த லிலிங்காயத் தலைவர்கள் விலகினர்.
இன்று மதியம் பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் அமித்ஷா தேவனஹள்ளியில் பேரணி நடத்துகிறார். இதில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் துணை முன்னாள் முதல்வர் லக்ஷ்மண் சவாடியா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கர்நாடகத் தேர்தல் நடைபெற இன்னும் 20 நாள்களே உள்ள நிலையில் முக்கிய தலைவர்கள் அனைவரும் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

