

ஆந்திரத்தில் காட்டு யானை தாக்கியதில் 3 மாடுகள் உயிரிழந்தன. மேலும ஒரு காரும் சேதமடைந்தது.
ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் உள்ள பந்தவலசா கிராமத்தில் வியாழக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து சென்றனர். தொடர்ந்து, யானையை பிடிக்கும் முயற்சி நடந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே ஏப்ரல் 12ஆம் தேதி, அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் காட்டு யானைகள் தாக்கியதில் ஒருவர் பலியானார். இதுகுறித்து லக்கிபூர் வனத்துறை அதிகாரி கூறுகையில், கடந்த சில நாட்களாக சுமார் 35 காட்டு யானைகள் அப்பகுதியில் சுற்றித் திரிகின்றன.
உயிரிழந்த நபர் 55 வயதான அனுவர் ஹுசைன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த நபர் நீர்நிலையொன்றில் மீன்பிடித்துவிட்டு வீடு திரும்பும் போது காட்டு யானைக்கூட்டம் தாக்கியதாக உயிரிழந்த நபரின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.