கரோனா உயிரிழப்பை குறைத்த இட்லி, தேநீர்: ஆய்வில் தகவல்!

இட்லி, தேநீர், மஞ்சள் உள்ளிட்ட உணவு வகைகளால் இந்தியாவில் கரோனா உயிரிழப்பு குறைந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இட்லி, தேநீர், மஞ்சள் உள்ளிட்ட உணவு வகைகளால் இந்தியாவில் கரோனா உயிரிழப்பு குறைந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச விஞ்ஞானிகள் குழு நடத்திய சமீபத்திய ஆய்வில், இந்தியாவில் கரோனா தொற்றின் போது இறப்புகளைத் தடுப்பதில் இட்லி-சாம்பார் மற்றும் ராஜ்மா-அரிசி சாதம் உள்ளிட்ட பல்வேறு இந்திய உணவுகள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கக்கூடும் என்று கண்டறிந்துள்ளது.

இந்த வகை உணவில் அதிக அளவு இரும்பு, துத்தநாகம் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்டவைகள் உள்ளது. மேலும், தேநீர் உட்கொள்ளல் மற்றும் உணவில் மஞ்சளைப் பயன்படுத்துதல் ஆகியவை கரோனா தொற்றின் தீவிரத்தன்மை மற்றும் இறப்பு விகிதத்தைக் குறைத்திருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இரும்பு, துத்தநாகம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க அதிகம் பங்களிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டாலும், இந்த நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு நபருக்கு நபர் மாறுபடும் என கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்ந்து தேநீர் அருந்தும் இந்தியர்கள், நல்ல கொலஸ்ட்ராலாகக் கருதப்படும் எச்டிஎல் (உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம்) அளவை அதிகமாக வைத்திருக்க முடிந்தது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. தேநீரில் உள்ள கேட்டசின்கள் இயற்கையான அட்டோர்வாஸ்டாடினாக செயல்பட்டு இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கிறது.

இந்திய உணவில் மஞ்சளின் தொடர்ச்சியான பயன்பாடு சிறந்த நோய் எதிர்ப்பு சக்திக்கு பங்களித்தது என்று ஆய்வு கூறுகிறது.

இந்தியா, பிரேசில், ஜோர்டான், சுவிட்சர்லாந்து மற்றும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார நிபுணர்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, மேற்கத்திய மற்றும் இந்திய மக்களிடையே கரோனாவின் தீவிரத்தன்மை மற்றும் உயிரிழப்புகளில் உள்ள மாறுபாடுகளுடன் உணவுப் பழக்கம் தொடர்பு உள்ளதா என்பதை ஆராய இந்த ஆய்வு மேற்கோள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com