விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கேதார்நாத் கோயில் நடை மீண்டும் திறப்பு: முதல்வர் தாமி வழிபாடு

உத்தரகண்டின் புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலின் நடை பக்தர்களின் தரிசனத்துக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :25 ஏப்ரல் 2023, 7:14 am

உத்தரகண்டின் புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலின் நடை பக்தர்களின் தரிசனத்துக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. 

பிரசித்தி பெற்ற சார்தாம் கோயிலில்களில் கேதார்நாத் ஆலயமும் ஒன்று. முன்னதாக அட்சய திருதியை அன்று கங்கோத்ரி, யமுனோத்ரி ஆலயங்கள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று கேதார்நாத் கோயிலின் நடை திறக்கப்பட்டது.

கோயிலின் தலைமை பூசாரி ராவல் பீமா சங்கர் லிங் கேதார்நாத் கோயிலை திறந்து பாரம்பரிய சடங்குகளை செய்தார். முதல்வர் புஷ்கர் சிங் தாமி கோயிலின் நடையை திறந்துவைத்து வழிபாடு மேற்கொண்டார்.

கோயில் திறக்கப்பட்டதை வரவேற்கும் வகையில் ஹெலிகாப்டரில் இருந்து பக்தர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல் கேதார்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் இமயமலையில் கூடியிருந்து பிரார்த்தனை செய்தனர். கேதார்நாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் கடந்த சில நாள்களாக பனிப்பொழிவு அதிகமாகக் காணப்படுகிறது. இருப்பினும், பக்தர்கள் மலையேறும் பாதையில் இருந்து பனி அகற்றப்பட்டுள்ளது. 

அடுத்த சில நாள்களுக்கு இப்பகுதியில் சீரற்ற வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் ரிஷிகேஷ், பத்ரகாளி மற்றும் வைசி ஆகிய இடங்களில் உள்ள முக்கிய தலங்களில் தற்போதைக்கு தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.