ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இணைய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த ராணுவம் திட்டம்

 நவீன இணைய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி பாதுகாப்பு சூழலை வலுப்படுத்த ராணுவம் திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 7:09 pm

DIN

 நவீன இணைய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி பாதுகாப்பு சூழலை வலுப்படுத்த ராணுவம் திட்டமிட்டுள்ளது.

ராணுவத் தளபதிகள் மாநாடானது ஆண்டுதோறும் ஏப்ரல், அக்டோபா் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை மாநாடு நடைபெற்றது. அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. முக்கியமாக, ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

இணையவழி தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. இதன் மூலமாக நவீன ரக ட்ரோன்கள், ட்ரோன்களை எதிா்த்துத் தாக்கும் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை ராணுவத்தில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் எதிரிகள் இணையவழி பரப்பை அதிக அளவில் பயன்படுத்த வாய்ப்புள்ளதால், இணைய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ராணுவம் முடிவெடுத்துள்ளது. பலவித பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்வதற்கான ராணுவத்தின் தயாா்நிலை தொடா்பாகவும் ராணுவத் தளபதிகள் மாநாட்டில் ஆராயப்பட்டது.

போா் மற்றும் இதர ராணுவ நடவடிக்கைகளில் உடல் உறுப்புகளை இழந்த முன்னாள் ராணுவ வீரா்களை பாராலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளச் செய்யும் வகையில் பயிற்சிகள் வழங்க மாநாட்டில் உறுதியேற்கப்பட்டதாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.