கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அமித் ஷாவின் பேரணிக்குத் தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் புகார்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேரணிக்கு தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஏப்ரல் 2023, 11:26 am

DIN


உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக பெங்களூருவில் உள்ள ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியதாவது, 

இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் மே 10-ம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் மதக்கலவரம், வன்முறை ஏற்படும் எனக் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் அமித் ஷா. காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என வாக்காளர்களை மிரட்டும் முயற்சியும் நடந்துள்ளது. 

நாட்டின் மிக உயர்ந்து பதவியில் இருக்கும் அமித் ஷா மாநில மக்களை அச்சுறுத்துவது தகுமா? இது என்ன ஜனநாயகம்? அவர் மீது ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் நாங்கள் புகார் அளித்துள்ளோம். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மத்திய உள்துறை அமைச்சர் ஷா, பாஜக தலைவர்கள் மற்றும் பாஜக பேரணி அமைப்பாளர்கள் மீது பல்வேறு சமூகத்தினரிடையே பகைமை மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டதாகக் குற்றம்சாட்டி காவல்துறையில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.