ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பாதுகாப்பு உயரதிகாரிகளுடன் வங்கதேச தளபதி சந்திப்பு

 இந்திய பாதுகாப்புப் படை உயரதிகாரிகளை வங்கதேச ராணுவத் தலைமைத் தளபதி எஸ்.எம்.சஃபியுதீன் அகமது சந்தித்துப் பேசினாா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 6:44 pm

DIN

 இந்திய பாதுகாப்புப் படை உயரதிகாரிகளை வங்கதேச ராணுவத் தலைமைத் தளபதி எஸ்.எம்.சஃபியுதீன் அகமது சந்தித்துப் பேசினாா்.

இந்தியாவில் 3 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச தலைமைத் தளபதி எஸ்.எம்.சஃபியுதீன் அகமது, முப்படைத் தலைமைத் தளபதி அனில் சௌஹானை புதன்கிழமை சந்தித்துப் பேசியிருந்தாா். இந்நிலையில், ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, கடற்படைத் தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா், விமானப் படைத் துணைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங், வெளியுறவுத் துறைச் செயலா் வினய் குவாத்ரா, பாதுகாப்புத் துறைச் செயலா் கிரிதா் அரமனே ஆகியோரை அவா் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து இந்தச் சந்திப்புகளின்போது விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமிக்கு சனிக்கிழமை (ஏப். 29) வருகை தரவுள்ள வங்கதேச தலைமைத் தளபதி, அங்கு நடைபெறும் பயிற்சி நிறைவு விழாவில் கலந்துகொள்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.