ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு நூலாக வெளியிடப்படும்: மத்திய அமைச்சர்

மாபெரும் சாதனைகளைப் படைத்த பழம் பெரும் இசைக் கலைஞரான எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்றை சிறிய நூல்களாக வெளியிடும் திட்டத்தை

News image

நாடாளுமன்றம்

Updated On :2 ஆகஸ்ட் 2023, 2:19 am

 நமது நிருபர்

மாபெரும் சாதனைகளைப் படைத்த பழம் பெரும் இசைக் கலைஞரான எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்றை சிறிய நூல்களாக வெளியிடும் திட்டத்தை அரசு மேற்கொள்வதாக மத்திய கலாசார, சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தார்.
 புகழ் பெற்ற ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர் பீம்சென் ஜோஷியின் வாழ்க்கை வரலாற்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளதா?, தமிழகத்தின் புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்று நூலை மத்திய அரசு வெளியிடுமா என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
 இதற்கு மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி அளித்துள்ள பதிலில், "பீம்சென் ஜோஷி வாழ்க்கை வரலாற்று நூல் அரசால் வெளியிடப்படவில்லை. ஆனால், மாபெரும் சாதனைகள் படைத்த கலைஞர்களின் வாழ்கை வரலாற்றை சிறிய நூல்களாக வெளியிடும் திட்டம் ஒன்றை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
 மேலும், எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்த கேள்விக்கு, "சங்கீத நாடக அகாதெமி விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட இந்திய நிகழ் கலைகளில் (பர்ஃபாமிங் ஆர்ட்ஸ்) புகழ்பெற்ற பல்துறை கலை மேதைகளின் சுயசரிதை, வாழ்க்கை வரலாற்று நூல்கள் வெளியிடப்படும்' எனவும் அமைச்சர் கிஷண் ரெட்டி எழுத்துபூர்வமாகப் பதிலளித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.